Thursday, November 20, 2014

வானம் மெல்ல கீழிறங்கி …

வானம் மெல்ல கீழிறங்கி …

வணக்கம்.
இசை ஆர்வலர்களாகிய நீங்கள் தந்த ஆதரவினால் தொடர்ச்சியாக வெற்றிகரமாக இயங்கிய இசைப்பா குழுவினர் இதோ 50-ம் பதிவைத் தொட்டிருக்கிறோம்.  50 பதிவுகளானாலும், 25,000 -க்கும் அதிகமான பார்வைகளோடு முன்னணியில் இருக்கிறது இசைப்பா தளம். இதோ இன்றைக்கு அதே மகிழ்ச்சியை இசைஞானி இளையராஜா அவர்களின் இசைப் பிராவகத்தில் கொடுக்கிறோம்.
raaja-nepசென்ற ஆண்டில் பாடல்களுக்காக  மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்ற சில திரைப்படங்களுள் இதுவும் ஒன்று. அதிலும் மிகவும் எதிர்பார்க்கவைத்த கௌதம்+இளையராஜா கூட்டணி எதிர்பார்ப்பைப் பொய்யாக்கவில்லை. ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரஹ்மான், தாமரை என  கௌதமின் முந்தைய கூட்டணிகள் எதுவுமின்றி நா.முத்துக்குமார் அனைத்துப் பாடல்களையும் எழுத இளையராஜா இசையமைத்தார்.   இப்படப்பாடல்கள் இலண்டனில் ஆங்கிலோ-இந்திய இசைக்கலைஞர்களால்  பதிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு இதே தேதியில்தான் (செப்டம்பர்-1) இப்படத்தின் இசை வெளியானது.
ஒரு மென்சோகத்தை தாங்குவதுபோல் துவங்கும் கோரஸ் –ல் ஆரம்பித்து நமக்குள் இணையத் தொடங்கிவிடும் prelude (முன் இசை) வயலினில் உச்சம் தொடுவதை அத்தனை எளிதாக அடுத்தடுத்த முறைகளில் கடந்துவிட முடியவில்லை.
ராஜாவின் குரலில் நிதானமாகத் துவங்கும் இப்பாடல், ஆங்காங்கே வியப்பூட்டவும் தவறவில்லை. குறிப்பாக ராஜாவின் குரலில் பல்லவியின் முடிவில் ஒலிக்கும் தருணம்தருணம்…! வரிகள்.
அதேபோல் சரணத்தின் வரிகளுக்கிடையே தாலாட்டு போல ஒவ்வொரு முறையும் பின்தொடரும் வயலின் வாவ்! ரகம். வழக்கத்தை விட சற்றே நீளமான வரிகள் அத்தனை பாந்தமாக இசைக்குள் அடங்குவதில் மின்னுகிறார் கவிஞர் நா.முத்துக்குமார். சில வரிகள் இங்கே.
கண்கள் உள்ள காரணம்?
உன்னை பார்க்க தானடி
வாழும் காலம் யாவும் உன்னை பார்க்க
எந்தன் கண்கள் போதாதே!
பாடல் வரிகளிலும், இசையிலுமாய் கரையுங்கள்.

நன்றி : isaipaa.wordpress.com